Tuesday, September 28, 2010

காதல் வரம்


காதல்...
காதல்....
காதல்...

உயிரினங்களுக்கு இயற்கை கொடுத்த அறிய வரம் இந்த காதல்...

உடலுக்கு உயிரின் மேல் காதல்..
உள்ளத்துக்கு உறவின் மேல் காதல்...
உலகுக்கு ஒளியின் மேல் காதல்...
ஆணுக்கு பெண்ணின் மேல் காதல்...
பெண்ணுக்கு பொன்னின் மேல் காதல்...
மயிலுக்கு மழையின் மேல் காதல்...
மழைக்கு மலையின் மேல் காதல்...
இரும்பிற்கு காந்தத்தின் மேல் காதல்...
எறும்பிற்கு கரும்பின் மேல் காதல்...
அரும்பிற்கு குறும்பின் மேல் காதல்.......................................................


......காதல்...
......காதல்
...
......காதல்......

இந்த காதல்தான் உலக உயிர்களை ஒன்றிணைக்கும் பாலம். உலகில் உயிரினம் நிலைக்கவும்...புதிய உயிர்கள் தழைக்கவும் மிகப்பெரும் பணிசெய்வது...இந்த காதல் என்றால் அது மிகையாகாதுதானே!


காதல் என்றால்...
பிரிதொன்றிற்காக தன்னை இழப்பதும்...
தன்னை மறப்பதுமாகும்!

அவ்வாறு தன்னை இழந்து, மறந்து உயிர்களை தழைக்க வைக்கும் காதலை நன்வகையில் பிழைக்க வைக்கவே இந்த காதல் வலை...இவ்வலையில் நாமும் அகப்படுவோம் வாருங்கள் நண்பர்களே உலகையும், பிற உயிர்களையும் காதல் செய்வோம்...உலகில் அன்பை நிலை நாட்டுவோம்...


- அமுல்கண்ணன்


ஹாய் நண்பா...

"டேய் மச்சா! இவ என்னடா 'காதல் வலை'னு பேர வச்சுட்டு, இப்டி வெட்டி டயலாக் பெசிட்டிருக்கானேனு" கலாய்க்காதீங்க!...இது சும்மா ஜஸ்ட் ஒரு அறிமுகம்தாண்டா மாப்ள????. இதுக்குமேல பாரு...



எனது வலைப்பூ தோழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
தயவுசெய்து அருவருக்கத்தக்க வகையிலான கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக தவிர்க்கவும்...